சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாறுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய் கூறப்பட்டு வருகிறது, கற்புடைய தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்ட மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பு அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர், சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன்ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுபடுத்தித் தீய செயல்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளான். அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்குவதற்கு இடம்...