கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியம்பாளையம் கிராமம், கொமட்டேரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறாள். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். இத்திருக்கோயில் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. கொமட்டேரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் திருமணம் நடைபெற வேண்டியும், புத்திரபாக்கியம் கிடைக்க வேண்டியும், நோய்கள் தீர வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு புடவை, திருக்கோயிலில் மணி வாங்கி வைத்தல்,கரும்பு தொட்டிலில் குழந்தை எடுத்து வருதல், பொங்கல் வைத்து அபிஷேகம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.