்ரீகுழந்தை சுவாமிகள் சிவ ஆகம விதிகளின்படி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார் என்பதால் இங்கு குங்குமத்துடன் விபூதியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ்ரீநரசிம்மர் முதலில் கிருதமாலா நதியிலிருந்து முதலில் தோன்றினார் என்பதால் ஆடி மாதம் வரும் ஸ்வாதி நட்சத்திரத்தில் இக்கோயிலின் பிரம்மோஸ்சவம் ஆரம்பிக்கிறது. இந்த பதினைந்து நாள் பெருந்திருவிழா மிக கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது. தினமும் பகவானுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். அதுவும் விருத்த அலங்காரம் அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத்திருக்கோயிலின் விசேடம் ஆதி பிரபுவான ்ரீகணபதியும் அந்தபிரபுவான ்ரீஆஞ்சநேயரையும் ஒருங்கிணங்க ஒரே கர்ப்பகிரஹத்தில் தரிசிக்கலாம். மற்றுமொரு விசேடம் பெரிய திருவடியாகிய ்ரீகருடாழ்வாரையும், திருவடியாகிய ்ரீஆஞ்சநேயரையும் ஒரே கர்ப்பகிரஹத்தில் தரிசிக்கலாம்.