பத்மகிரீஸ்வரரை நெல்லி பாத்திரத்தில் வழிபாடு செய்ய தீராத நோய்கள், மன நோய்கள் தீர்க்கும் என்பது ஸ்தல விஷேசம். மேலும் பத்மகிரீஸ்வரரையும், பத்மகிரி மலையையும், கிரிவலம் வந்தால் திருமணத்தடை, புத்திர பேறு கிடைக்கும். இங்கு அனைத்து பக்தர்களும் இரு பெரும் சிவ மூர்த்தங்களையும் வழிபாடு செய்து பல நற்பலன்களை பெற்று வருகிறார்கள். இங்கு உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை அம்பிகையை வழிபாடு செய்தால் மறதிநோய் நீங்கி வெற்றி பெறலாம் என்பது நிதர்சனமான உண்மை. இந்த ஆலயத்தில் மிகவும் வரப்பிரசாதியான மூர்த்தி ஸ்ரீ அபிராமி அம்மன். இந்த மூர்த்தியை வழிபாடு செய்தால் தொழில், குடும்பத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழ அருள்தரும் அற்புத மூர்த்தி. இங்கு உள்ள தெட்சிணாமூர்த்தி இரு பெரும் சிஷ்யர்கள்...