இத்திருக்கோயிலில் திண்டுக்கல் நகரில், வாணி விலாஸ் மேட்டில், தாடிக்கொம்பு ரோடு, பழனி ரோடு சந்திக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன் வண்டியில் இந்த அம்மனை ஏற்றி வந்ததாகவும், மேற்படி வண்டி இந்த இடத்தில் வரும் போது அச்சு ஒடிந்ததாகவும் இந்த இடத்திலிருந்த வேப்ப மரத்தடியில் அம்மனை இறக்கி வைத்துவிட்டு வண்டியினை பழுது பார்த்து, திரும்ப எடுத்துச் செல்ல முயற்சிக்கும் போது தான் இவ்வேப்ப மரத்தடியில் குடி கொண்டதாகவும் கஷ்டம் நிவர்த்தி வேண்டி வருகை தரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும், அம்மன் தெரிவித்து அமர்ந்து விட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பு...