வெயில்- மழை எல்லாவற்றையும் தாங்கியபடி வெட்டவெளியில் (கூரை இல்லாமல்) காட்சி தருகிறாள் பிள்ளைவயல் காளி. இங்கு, ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி, அடுத்த வெள்ளிக்கிழமை வரை விமரிசையாக நடை பெறுகிறது பூச்சொரிதல் விழா. தீக்காப்புக்கட்டு அன்று மாலை வேளையில், கோயில் பூசாரியின் தலைமையில் அம்மன் சந்நிதியில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளத்தை அடைகின்றனர் பக்தர்கள். அங்கு பூசாரி `பூக்கரகம்` கட்டியதும் வேண்டுதல் வைத்தவர்கள், மேள-தாளம் முழங்க தீச்சட்டிகளைச் சுமந்தபடி கோயிலுக்கு வருகிறார்கள். பிறகு அம்மன் சந்நிதி முன் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகம் முதலான ஆராதனைகளும் நைவேத்தியமும் நடைபெறுகின்றன.