சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர் மற்றும் வட்டம், மீனாட்சிபுரத்தில், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னை லலிதா முத்துமாரியம்மனை வழிப்பட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலில் நடைபெறும் மாசி பங்குனி பெருவிழா சிவகங்கை மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு பக்தர்கள் தக்காளி பழம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.