அாியக்குடியில் வாழ்ந்து வந்த பெரும் தனவணிகரான நகரத்தார் பெருமகனார் அழகிய வாணப்ப செட்டியார் பேரனும் முருகப்ப செட்டியாாின் ஐந்தாவது புதல்வனுமாகிய சேவுகன்செட்டியார் ஈத்துவக்கும் இன்பமே போின்பம் என்று வாழ்ந்து வந்தார். இந்த முருகன் செட்டி சேவுகன் செட்டி என்பவரே பெருமாளை நோில் கண்ட பெருமகனாவார். அருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பதை நன்கறிந்த சேவுகன் செட்டியார் அவர்கள் ஆண்டவன் அருட்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தொடங்கினார்கள். பக்தர்கள் பலர் தீராத நோய்களையும் சேவுகன் செட்டியாரைத் தாிசித்து போக்கிக் கொண்டனர். திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை இவரது உண்டியலிலேயே செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அவ்வுண்டியலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு நடந்து சென்று உண்டியல் காணிக்கைகளை சமர்ப்பித்து வந்தார்கள். மூப்பெய்திய காலத்தில் ஒருநாள் பொியவர் தலையில் காணிக்கை...