மேற்படி திருக்கோவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அருள்மிகு ஆத்மனாகிய அய்யனார் மற்றும் பூர்ணகலா புஷ்பகலா உடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர் , தண்டாயுதபாணி , மஹாலட்சுமி மற்றும் பைரவர் சன்னதி அமைந்துள்ளது. காளியம்மன் சிலை தேவகோட்டை விரிசிலை ஆற்றங்கரை அருகில் உள்ள நிலத்தை உழுது வரும் பொழுது பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் அவற்றை மேற்படி கோவிலில் வடக்கு பார்த்து சன்னதி அமைத்து பிரதிவுடை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேற்படி சன்னதிக்கு அருகில் நொண்டிகருப்பன் , பெரிய கருப்பன் , பேச்சியம்மன் , சந்ததிகள் வடக்கு பார்த்து உள்ளது. இத்திருக்கோவில் தேவகோட்டை நகர் இறகுசேரி பகுதியில் அமைந்துள்ளது. இராவணன் சீதா பிராட்டியாரை சிறை பிடித்து புஷ்பக விமானத்தில்...