இந்த ஆலயம் பூலாங்குளத்திற்கு கிழக்கே முற்கால பாண்டியர் கி.பி.862-880 ஆண்டு இரண்டாம் வரகுணபாண்டியரின் ஆட்சியில் செங்கலால் கட்டப்பட்டு மூலவரான ஈஸ்வர படாரருக்கு நெற்றிபட்டையாக சுத்தப்பட்டது.பிற்கால பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கற்றளியாக திருத்தி கட்டப்பட்டது.இராஜேந்திசோழனின் மகன் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் கி.பி. 1018-1040 ஆம் ஆண்டு இக்கோவிலில் திருப்பணி செய்ததாக கூறப்படுகிறது.சுமார் 1000 ஆண்டு தொன்மை மிக்க இவ்வாலயம் அமைந்த ஊர் சோழநாடு என்கின்ற உள்நாட்டு பிரிவில் திருப்பாலையூர் என்ற பெயரால் அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் பிரதோச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் மேலும் மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறும்