தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோவில் கோவில்பட்டி நகரில் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வெம்பக்கோட்டையை ஆண்ட செண்பகபாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. அகத்திய முனிவரால் பூஜை செய்த பெருமை உடையது. இத்திருக்கோவிலில் இறைவன் லிங்க வடிவிலும் இறைவி நின்ற கோலத்தில் 7 அடி உயரத்தில் இருப்பது தனி சிறப்பாகும். இத்திருக்கோவிலில் சுவாமி தேர் அம்பாள் தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. இத்திருக்கோவில் பிரம்மோத்ஸவமான பங்குனி திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதில் 9ம் நாள் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். 11ம் திருநாள் தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இத்திருக்கோவிலில் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்....