இறைவன் - அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் இறைவி அருள்தரும் முத்தாரம்மன் மூர்த்தம் என்ற சொல்லூக்கு உருவம் என்று பொருள் இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் நின்று காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது உளி கொண்டு செதுக்காதது.