இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளாங்குளி கிராமத்தில் அமைந்துள்ளது. மூலவர் அருள்மிகு வீரவினோதீஸ்வரர் அம்பாள் அருள்தரும் அறம்வளர்த்த நாயகி ஆவர். இத்திருத்தல இறைவனை வழிபட்டால் திருமணத்தடை நீக்குவார் என்பது இவ்வூரார் நம்பிக்கை. ஆகமங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை.