திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டத்தில் திருப்பூர் சாலையில் காங்கயத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் பட்டாலி கோயில் உள்ளது. காங்கய நாட்டுக்கு பொதுமலையாக உள்ளது. காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்ப்பொது மக்களும் வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் குடமுழுக்கு விழா நடத்தியதாகவும் இலக்கியங்களும் தனிப்பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் கூறுகிறது. பட்டாலி நகர்ச் சிவன்மலை சிவன்மலைக் பட்டாலியாரை என்றே குறிப்புக்கள் வருகின்றன. சிவன்மலைச் சுப்பிரமணியரை பட்டாலி பால்வெண்ணீசுவரர் பாலன் என்று அழைப்பதே வழக்கமாகும.