சேலம் செவ்வாய்பேட்டை என்று அழைக்கப்படும் செவ்வை நகர் பகுதி கி.பி. 1792ம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் இருந்தது. பேட்டை என்றால் தொழில்களால் சிறப்பு பெற்ற ஊர் என்று பொருள். வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை கூடும் . இதை மங்களபுரி என்றும் பெயர் உண்டு. குழவி உருவமுள்ள கல் ஒன்று நடைபாதையில் தடுக்கியதால் அந்தக் கல்லை தலையில் சுமந்து கொண்டு வந்து தற்போது கோயில் உள்ள இடத்தில் போட்டு விட்டார்கள். அந்த இடத்தில் வேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த குழவிக்கல் நனையாமல் இருக்க நான்கு புறமும் குச்சிகள் கட்டி துணி ஒன்றை கட்டியதாக சொல்லப்படுகிறது. அன்றிரவு தெய்வ சிந்தனை மிக்க மூதாட்டி ஒருவருக்கு கனவு தோன்றி...