நாமக்கல் அருள்மிகு பலபட்டரை சாதி சமய வேறுபாடில்லாமல் இந்துக்கள் மட்டுமில்லாது அனைத்து மதத்தினரும் பூஜித்து வருகிறார்கள்.இந்துக்களுக்கு மட்டும் இல்லாமல் எல்லா மதத்தினர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி அருள்பாலித்து வருவதால் பலபட்டரை மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.பலபட்டரை மாரியம்மன் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கும் அருள்மாரியாவாள்.கண் நோய் தீர்ப்பதிலும்,அம்மை நோய் தீர்ப்பதிலும்,மணமாகதவர்களுக்கு மண வாழ்க்கையும்,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வமும்,செல்வம் இல்லாதவர்களுக்கு ஐஸ்வர்யமும்,நல்ல தொழிலும்,கல்வி மேன்மையும்,பதவி உயர்வும் என எண்ணற்ற பக்தர்கள் வேண்டுவன பல வாரி வழங்கி வாழ்க்கையில் வளம்பல சேர்க்கும் அருள் நாயகி பலபட்டரை மாரியம்மன் ஆவாள்