அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி திருக்கோயிலானது நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், மோகனூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது மிகவும் சிறப்பு வாய்ந்தாக திருத்தலமாக உள்ளது.இத்திருக்கோயிலில் தல விருட்சமாக நாவல் மரம் உள்ளது. இத்திருத்தலத்திற்கு பட்ட மரத்தன், நாவலடியான் என சிறப்பு பெயர்களையும் கொண்டுள்ளது. இத்திருக்கோயிலில் உண்மையான கோரிக்கைகளை நாவலடி கருப்பண்ணசாமியிடம் கோரிக்கையாக எழுதி பூஜை செய்து அங்குள்ள பட்ட மரத்தில் கட்டிச்சென்றால் அதிக பட்சமாக மூன்று மாதங்களில் நடக்கும் என்பது ஐதீகம்.