பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் கிரிமலையானது 5 1/2 கிலோ மீட்டர் ஏழுமலைகளை கொண்ட சுயம்பு லிங்கமாக அமைந்துள்ளது, இதன் சிறப்பு தென்கைலாயம் என போற்றப்படுகிறது.பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் சட்டப்பிரிவு 46(111)-ன் கிழ் பட்டியலைச் சேர்ந்த முதல் நிலைத் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் முதல்நிலை செயல் அலுவலராலும், கோவை உதவி ஆணையர் அவர்கள் தக்காராகவும் இருந்து நிவாகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலின் பசலி 1431-ன் சகாயத் தொகை நிர்ணய வருமானம் ரூ.1,22,89,372/- ஆகும். 1963-ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு ...