நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு அருகில் பொக்காபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில் பொக்காபுரம் மாரியம்மன் கோயில். இந்த திருக்கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைப்பெறும் கார் திருவிழா புகழ்பெற்ற திருவிழா ஆகும். இது மாசி மாதத்தில் தமிழ் மாதத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.