தினசரி 100 நபர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 100 நபர்களுக்கு கட்டணமாக ரூ 3500/-ம் வடைபாயாசத்துடன் அன்னதானம் வழங்க ரூ.4500/-ம் செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம். அன்னதானக் கட்டளைக்காக ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள், பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவற்றில் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமானவரி விலக்கு (80ஜி) உண்டு. அன்னதானம் வங்கி கணக்கு எண்.448980513 வங்கி கிளை - இந்தியன் வங்கி, திருவாரூர். அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.