மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 15.08.2002-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 100 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்கான திட்டச்செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்படும். இந்த மதிய உணவில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீருடன்சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12 மணியளவில் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இணையதளத்தில் (018013 ) இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக அன்னதான நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வாரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், பட்டீச்சுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.