சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சை மாநகரில் முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப் பெற்ற வரலாற்றுப் புகழ் மிகுந்த சிவாலயம் இராசராசேச்சரம் என வழங்கப்படும் பெரியகோயில் ஆகும். சைவத்தில் கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். அதுபோல, பெரியகோயில் என்பது தஞ்சை இராசராசேச்சரம் என்னும் பெருவுடையார் திருக்கோயிலைக் குறிக்கும். இப்பெரிய கோயில் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா பெற்ற சிறப்பினையுடையது. இத்திருக்கோயில் சோழப் பேரரசன் மாமன்னன் முதலாம் இராசராசன் அவர்களால் கி.பி.1003 - 1010 வரை கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பப்பட்ட ஒரு கற்றளி ஆகும். பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ இராசராசேச்சுரம் - என்று கல்வெட்டு மூலம் இதன்...
| 06:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| தினசரி நான்கு கால பூஜை நடைபெற்று வருகிறது. காலை 6.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 8.30 மணிக்கு காலை பூஜை நடைபெறும். மதியம் 12.00 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை சாற்றப்படும். மீண்டும் 4.00 மணிக்கு நடை திறக்கப்படும். 6.00 மணிக்கு மாலை பூஜை நடைபெறும். இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். இரவு 8.30 மணிக்கு திருக்கோயில் நடை சாற்றப்படும். | |