திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் மற்றும் வட்டம் அருள்மிகு ஸ்ரீநீளா தேவி ஸ்ரீபூமா தேவி சமேத அபிஷ்ட வரதராஜப்பெருமாள் திருக்கோயில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் 16அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் மற்றும் ஹயங்கீரிவரும் மிகவும் பிறசித்தி பெற்று விளங்கிவருகிறார்.இத்திருக்கோயில் திருத்துறைப்பூண்டி இருந்து முத்துப்பேட்டை செல்லும் மார்க்கத்தில் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து 700மீட்டர் தொலைவிலும் திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்திலிருந்து 500மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.