அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலாகும், தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்துக்கு தெற்கே சுமார் 50 கீலோ மீட்டர் தூரத்தில் நரஸிம்மப் பெருமாள் திருக்கோயில் ஊரின்மையத்தில் அமைந்துள்ளது. புகைவண்டி நிலையமும், பேருந்து நிலையமும் இந்த ஆலயத்திற்கு சமீபத்திலேயே அமைந்துள்ளது. இது ஒரு புராணஸ்தலமாகும். பிரம்மாண்ட புராணத்தில் இந்த ஆலயத்தைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. நரஸிம்ம அவதார காலத்தில் இக்கோயிலைச்சுற்றி பெரிய காடாக இருந்ததாகவும், அக்காட்டில் ஜாபாலி என்னும் மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும், அவரது பிரார்த்தனைக்கு இணங்க ஸ்ரீ நரஸிம்ம ஸ்வாமி ஹிரண்யனை வதம் பண்ணியவுடன் அதே கோபத்தில் உக்ர நரஸிம்மனாக மூன்று கண்களுடன் (த்ரிநேத்திரம் தரிசனம்) ஜாபாலி மஹரிஷிக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. இத்திருக்கோயிலை பக்தர்கள் மற்றும்...